Our Feeds


Friday, April 11, 2025

Zameera

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்


 ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று(11) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் 1,037,141 குடும்பங்களுக்கு மொத்தமாக 12.63 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 580,844 சிரேஷ்ட பிரஜைகளுக்கு, மொத்தமாக 2.9 பில்லியன் ரூபாய் நலன்புரி கொடுப்பனவு வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »