Our Feeds


Monday, April 14, 2025

Zameera

ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய சீனா மீண்டும் கோரிக்கை


 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் எனச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பரத் தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார்.

இது கடந்த வாரங்களில் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், 90 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 145 சதவீதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த நடவடிக்கைக்குச் சீனா தமது எதிர்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தமது தவறுகளைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரஸ்பர வரிகள் என்ற தவறான நடைமுறையை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் எனச் சீனாவின் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »