Our Feeds


Sunday, April 13, 2025

Sri Lanka

வர்த்தகப் போர் | மீண்டும் பின்வாங்கினார் ட்ரம்ப் - ஏன்?



அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ம் திகதி, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.


அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதனால், சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.


அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »