Our Feeds


Friday, April 4, 2025

Zameera

இந்திய மீனவர்கள் விடுவிப்பு


 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண அடிப்படையில் 04.03.2025 இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.


சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்ற பிறகு கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.அலுவலகத்தினரால் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே ஊர்காவற்றுரை நீதிமன்றத்தால் இவர்களை விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் முதற்தடவையாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.


இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.


பெயர் விபரங்கள்


1.  சந்தியா பாக்யராஜ்


2.  சகாயம் சவேரியர் அடிமை


3.  ரவிச்சந்திரன் முத்துகளஞ்சியம்


4.  ராஜப்பன் ரஞ்சித்


5.  ஆறுமுகம் பாலமுருகன்


6.  ஜெகன் ஆராக்கியம் எபிரோன்


7.  சேசு மைக்கல் யோவான்ஸ் நானன்


8.  சகாயம் இன்னாசி


9.  ஜார்ஜ் அந்தோனி ஆர்னாட் ரிச்சே


10. அடிமை லியோன் அந்தோனி சிசேரியன்


11. யேசு இருதயம் கிறிஸ்துராஜா


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »