உலகின் உயரமான பாலம் எதிர்வரும் ஜூன் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பாலம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்பென் ஆற்றின் மேலாக 2,051 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கிராமப்புறப் பகுதியில் முக்கியமான போக்குவரத்து இணைப்புகளை வழங்கும் நோக்கில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக சீனத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தப் புதிய பாலம் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது