Our Feeds


Wednesday, April 2, 2025

SHAHNI RAMEES

கைதுக்கு தெளிவான காரணாம் சொல்ல முடியாவிட்டால், ருஷ்டிதியை விடுதலை செய்யுங்கள். - ஹிதாயத் சத்தார்

 


ஈஸ்டர் குண்டு சூத்திரதாரியை பிடிக்க வந்த்வர்கள்

ஸ்டிக்கர் ஒட்டிய வாலிபரை பிடித்து வைத்து படம் காட்டுகிறார்களா ?


ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் எதிர்வரும் 21 ம் திகதி அனுஸ்டிக்க உள்ள நிலையில் ஈஸ்டர் குண்டு சூத்திரதாரியை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து ஸ்டிக்கர் ஒட்டிய வாலிபரை பிடித்து படம் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ருஷ்டி என்ற வாலிபர் பயங்கரவாத தடை சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் ஆழ்ந்த கவலையடைந்தேன்.



ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தில் பலர் சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார்கள்.குற்றம் செய்தவர்களுக்கு பாராபட்சம் இன்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது.


ருஷ்டி கைது செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு தரப்பு விடும் அறிக்கைகளை பார்த்தால் குறித்த வாலிபர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கம் இல்லை என்பது தெளிவாக புரிகிறது. அதேவேளை பொலிஸார் கைது செய்துவிட்டு காரணம் தேடுவது போலவே தெரிகிறது.



பொலிஸாருக்கு ஒரு படி மேலே போய் அமைச்சரவை பேச்சாளர் பொலிஸாரை நியாயப்படுத்த கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார்.


சிறுபான்மை மக்கள் மீது பயங்கரவாத தடை சட்டம் பாவிக்கப்படுவது தொடர்பில் வீதியில் இறங்கி போராடிய தோழர்களின் ஆட்சியில் அதே சட்டம் இவ்வாறு பாவிக்கப்படுவது கவலையளிக்கிறது.


ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினம் எதிர்வரும் 21 ம் திகதி அனுஸ்டிக்க உள்ள நிலையில் ஈஸ்டர் குண்டு சூத்திரதாரியை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து ஸ்டிக்கர் ஒட்டிய வாலிபரை பிடித்து படம் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.



மேலும் கைது செய்தமைக்கு தெளிவான காரணாம் சொல்ல முடியாவிட்டால் தங்கள் மீது தாங்களே சேறு பூசிக்கொள்ளாமல் அரசு வாலிபரை விடுதலை செய்யுமாறு அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »