உயிரை காக்க பாய்ந்த வீரனுக்கு கெளரவிப்பு..
கடந்த 10ஆம் திகதி கடுகஸ்தொட்டை பழைய பெரிய
பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்த பெண்ணை உயிருக்கு பயப்படாமல் குதித்து காப்பாற்றிய 24 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீரச் செயலை அக்குறணை நலம்புரி சங்கம், அக்குறணை ஷியா வைத்தியசாலை நண்பர்கள் குழு இணைந்து பாராட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.இந்நிகழ்வு அக்குறணை ஷியா வைத்தியசாலை காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நினைவுச் சின்னம் மற்றும் பணப் பரிசு வழங்கப்பட்ட இந்த நிகழ்வில், மாவட்ட வைத்திய அதிகாரி, அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.