ஈஸ்டர் தாக்குதல் பற்றிய சம்வங்கள் நடக்கும் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தியின் பங்கு எப்படியிருந்தது?
இன்று வரை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அவர் இருக்க வேண்டும் என விரும்புவதின் நோக்கமென்ன? என வட மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியல் உறுப்பினராக செயல்பட்ட ஐயூப் அஸ்மின் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
தற்போது கனடாவில் வசித்து வரும் அஸ்மின் லண்டனில் இருந்து செயல்படும் ஒரு யூடியுப் சேனலுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இந்த சந்தேகத்தை பலமாக எழுப்பியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பதாக நடந்த சம்பவங்களை முஸ்லிம் சமூகம் மறந்து விட்டு இருக்க முடியாது. முஸ்லிம் சமூகம் இவற்றையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த விவகாரங்கள் எல்லாம் நடக்கும் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தியின் பங்கு எப்படியிருந்தது?
இன்று வரை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அவர் இருக்க வேண்டும் என விரும்புவதின் நோக்கமென்ன? ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவுக்கு ரிஸ்வி முப்தி வழங்கிய தகவல்கள் என்ன?
ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் ஹஜ்ஜூல் அக்பர், ரம்சி ராசிக், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஏன் கைது செய்யப்பட்டார்கள்? இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இந்த வலைப்பின்னலின் பிரமாண்டம் நமக்குப் புரிகின்றது. இதில் எல்லா சமூக அங்கத்தவர்களின் தொடர்புகளும் இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.