எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதிய விபத்தில் 06 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு ஆண் பயணி, இரண்டு பெண் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண் குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்தக் குழு எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, இதில் ஒரு பெண் குழந்தை காயமடைந்து உயிரிழந்தது, மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த 06 வயது சிறுமி பிடிகல பகுதியைச் சேர்ந்தவர்.
விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.