Our Feeds


Tuesday, April 8, 2025

Zameera

கண்டி மாவட்டத்தின் 41 பாடசாலைகளுக்கு 4 நாட்கள் விசேட விடுமுறை


 ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.


எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டியில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதன்படி, கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகள் இதற்காகப் பயன்படுத்தப்படும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நான்கு நாள் விடுமுறை வழங்கப்படும், மேலும் நிகழ்வின் போது வீதி போக்குவரத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தவறவிட்ட பாடசாலை நாட்களை ஈடுசெய்ய, பாதிக்கப்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 28ஆம் திகதி முதல் ஐந்து வாரங்களுக்குள் ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வகுப்புகளை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி நடவடிக்கைகள் தொடர்வதை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாகாண வலயக் கல்வி இயக்குநருக்குத் தெரிவிக்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »