ட்விட்டர்' நிறுவனத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி, 'எக்ஸ்' என்று மறுபெயரிட்டதால், நிறுவன கட்டடத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்நிறுவனத்தின் இலச்சினையான பறவை சின்னம் ஏலத்தில் விடப்பட்டு 35000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், 2006இல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. அப்போது, நிறுவனத்தின் இலச்சினையாக பறவை சின்னத்தை தேர்ந்தெடுத்தனர்.
அதன்பின், 2012ல் இலச்சினை மேலும் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது.
எலான் மஸ்க், 2023இல் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி 'எக்ஸ்' என மறுபெயரிட்டபோது, இந்த இலச்சினையின் பயன்பாடு நிறுத்தப்பட்டது.