Our Feeds


Tuesday, March 25, 2025

SHAHNI RAMEES

'பிரிட்டன் தடையால் எனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை' - கருணா Opentalk




பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு

எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தெரிவித்தார்.


இந்த தடை தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்று அவரிடம் வினவியபோது இப்படித் தெரிவித்த அவர் , தான் எந்தவித மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லையென தெரிவித்தார்..


அவர் மேலும் கூறியதாவது,


நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை.அதனால் இந்த தடை என்னை பாதிக்காது.எனது அரசியலையும் பாதிக்காது.நான் அப்படியெல்லாம் செயற்பட்டிருந்தால் நான் அங்கு தஞ்சமடைந்த காலப்பகுதியில் பிரிட்டன் என்னை கைது செய்திருக்கலாமே? ஏன் என்னை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும்? அப்போது இவையெல்லாம் தெரியவில்லையா? இவற்றைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. - என்றார் கருணா அம்மான் .


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »