நாட்டின் சில இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.