இன்று நாட்டை ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர்
வரலாறு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர். நாட்டை அழித்தது முதலாளித்துவ வர்க்கமே என்று இவர்கள் தொடர்ச்சியாக கூறி வந்தனர். ஆனால் முதலாளித்துவ வர்க்கம் என்று சொல்லப்பட்ட அரசாங்கங்கள் மக்களுக்கு நல்லதையே செய்துள்ளன. அவ்வாறு செய்த நல்லனவற்றுக் கூட இவர்கள் குறை கூறி திரிகின்றனர். தெளிவான அதிகாரம் கிடைத்தும் இன்று இவர்களால் எதையுமே செய்ய முடியாது புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.'சாதாரண மக்களுக்கு என்ன நடந்தாலும், பாதாள உலகத்தினருக்கு மறுமலர்ச்சி உதயமாகியுள்ளது,
வேறு வடிவிலான பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் இடமளித்துள்ளது. பாதாள உலகத்தின் வேர்களை, துப்பாக்கிதாரிகளின் கடத்தல் கலாச்சாரத்தை,
கொலைக் கலாசாரத்தை மர்மமான முறையில் முன்னெடுத்துச் செல்லும் கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னனணியின் தேசபக்தி இயக்கம்தான் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது. மக்கள் விடுதலை முன்னனணியினர் தான் துப்பாக்கி அரசியலை, துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்கள். இதனை நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டனர். பொது மக்களுக்கான மறுமலர்ச்சி எப்படி போனாலும் பாதாள உலகத்திற்கு புதிய மறுமலர்ச்சி யுகம் திசைகாட்டி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.