வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்ள
சிறைச்சாலைகள் திணைக்களத்தால் தேசபந்து தென்னகோனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் காமினி பி. திசாநாயக்க கூறுகையில், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையைக் கருத்திற் கொண்டு, தேசபந்து தென்னகோன் சிறைச்சாலைக்குள் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் சமீபத்தில் அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
அவர் தற்போது பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் வைக்கப்பட்டுள்ளார்