பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் "அண்மைக் காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்" என கேள்வி எழுப்பியவேளை அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.