அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது சம்பந்தப்பட்ட வைத்தியரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய நீதிமன்ற விசாரணையில் சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன் துஷ்பிரயோகத்திற்குள்ளான வைத்தியரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்து சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார்.