நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழைக்காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு நாளை மறுதினம் முதல் இருநாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.