காணாமல் போன மாகாண சபை வாகனங்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.
மாகாண சபைகளுக்குச் சொந்தமான திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பயன்படுத்துவதற்காக சில அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட சில வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.