Our Feeds


Wednesday, March 12, 2025

SHAHNI RAMEES

தேசபந்து தென்னகோனைத் தேடி சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் சி.ஐ.டி சோதனை


முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத்

தேடி, மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.


அதற்கமைய, தேசபந்து தென்னகோனை காணும் இடத்திலேயே கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) திறந்த பிடியாணை பிறப்பித்ததன் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இதேவேளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (12) விசாரணைக்கு வரவுள்ளது.




தனது சட்டத்தரணிகள் ஊடாக தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை சமர்ப்பித்து, இந்தக் கைது நடவடிக்கையானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரின் அழுத்தங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (12) விசாரணைக்கு வரவுள்ளது.


 

இத்தகைய சூழலில், தேசபந்து தென்னகோனை தேடும் பணியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »