பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் அனைத்து நிறுவனங்களையும் மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனங்களின் ஒழுங்குமுறையை நெறிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன தெரிவித்தார்.
தற்போது, முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக நாட்டில் சுமார் 65 நிறுவனங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது