Our Feeds


Monday, March 31, 2025

SHAHNI RAMEES

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம்! - அமைச்சர் பிமல்


பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம்

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 


நேற்று (30) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 


விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். 


இதன் போது விமான நிலையத்தின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ச அபய விக்ரம மற்றும் ஏனைய ஊழியர்களுடன் சேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார். 


இதன் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர், பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம் விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டங்கள் நிறைவடைந்துள்ளன எனவே அதனுடைய திட்டமிடலுக்கு ஏற்ப நான்கு மாதங்களுக்குள் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார். 


இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »