மாத்தளை மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தலில் ஜெர்மன் நாட்டு பெண் ஒருவர் நேற்று கட்டுப்பணம் செலுத்தி சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்தது அறிந்ததே.
இந்நிலையில் குறிப்பிட்ட பெண்ணின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது நிருபர் தெரிவித்தார்.
அந்தப் பெண் இலங்கையில் குடியுரிமை பெற்றவராவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவராகவும் காணப்பட்டாலும் அவர் விண்ணப்பித்த ஆவணங்களில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டதால் அவரின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்த ஜெர்மன் பெண் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபைக்கு போட்டியிட இருந்தார்.
இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையில், தான் போட்டியிடுவதாகவும் அவர் நேற்று தெரிவித்து இருந்த நிலையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.