Our Feeds


Friday, March 21, 2025

Zameera

உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் எமது வெற்றியை உறுதிப்படுத்துவர் - ரஞ்சித் மத்தும பண்டார

கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிப்போம். அரசாங்கம் செல்லும் வழி தவறானது என்பதற்கான சமிஞ்ஞையை இந்த தேர்தலில் மக்கள் காண்பிப்பார்கள். இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் எமது வெற்றியை உறுதிப்படுத்துவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20)  வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடளாவிய ரீதியில் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றோம். எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கு தேர்தல் பணிகளை திட்டமிட்டிருக்கின்றோம். 

அரசாங்கம் செல்லும் வழி தவறானது என்பதற்கான சமிஞ்ஞையை இந்த தேர்தலில் மக்கள் காண்பிப்பார்கள். கடந்த தேர்தல்களில் வாக்களிக்காதவர்கள் இம்முறை ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து எமது வெற்றியை உறுதிப்படுத்துவர் என்று நம்புகின்றோம்.

கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிப்போம். தவிசாளர் இம்தியாஸ் பாகீர் மாக்காரின் இராஜிநாமா கடிதத்தை கட்சி தலைவர் நிராகரித்துள்ளார்.

அவருடன் கலந்தாலோசித்து கட்சி என்ற ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அரசாங்கம் தவறான முடிவுகளை எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். 

பிரதான  எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமது கடமைகளை நாம் சிறப்பாக நிறைவேற்றுவோம். கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் கொழும்பில் பாரிய வெற்றியைப் பதிவு செய்வோம் என்றார்.

கம்பஹாவில் வேட்புமனு தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, கம்பஹா மாவட்டத்தில் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றோம். அரசாங்கத்துக்கு ஒரு செய்தியைக் கூறும் வகையில் சிறந்த வெற்றியை நாம் பெற்றுக் கொள்வோம்.

தேர்தல் பெறுபேறுகளின் மூலம் சமூகத்தில் யதார்த்த நிலைமையை அறிந்து கொள்ள முடியும். தமக்கு எவ்வித போட்டியும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தின் ஆணவமே அதன் தோவிக்கும் காரணமாக அமையும்.

(எம்.மனோசித்ரா)

ஏமாறுவதற்கும் வரையறையிருக்கிறது. எனவே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்முடன் இணையுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார். 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »