Our Feeds


Saturday, March 15, 2025

Zameera

நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றம்; ஆளும், எதிர்கட்சி இணைந்து தீர்மானிக்க வேண்டும்


 நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி இணைந்து தீர்க்கமான தீர்வு எட்டபட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் 2025 வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட மக்களுக்கு தேயிலை மலை காணியை வழங்குவதற்கு பதிலாக தரிசு நிலங்களை பகிர்ந்து கொடுக்கவும். பெருந்தோட்ட மக்களில் ஒரு சிலருக்கு மாத்திரமே வீடுகள் வழங்க முடியும் ஆனால் காணி எல்லோருக்கும் வழங்க முடியும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் விடயத்தில் மலையக பிரநிதிகள் அனைவரும் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றோம்

எமது கோரிக்கைகளுக்கேற்ப இந்தியா அரசாங்கத்தின் உதவியுடன் STEM ஆசிரியர் திட்டத்தின் ஊடாக மலையகத்தில் 400 பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கபட்டன. மலையகத்திலுள்ள 60 பாடசாலைகளுக்கு நவீன முறையில் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) அமைக்க நிதி ஓதுக்கீடு மேற்கொள்ளபட்டது.

நாட்டில் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டபோது பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாக 16000 க்கு மேற்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு "பிரஜாவித்தியா" திட்டத்தின் ஊடாக 8 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கரம் கொடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட மக்களுக்கான நாட்கூலி சம்பள முறைமை இல்லாதொழிக்கப்பட்டு புதிய பொறிமுறை ஒன்றை கொண்டு வரவேண்டும். என கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »