Our Feeds


Tuesday, March 18, 2025

Zameera

ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யவோ, அவரது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது


 பட்டலந்தை அறிக்கை மூலம் விக்ரமசிங்கவை கைது செய்வதோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமற்றது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில  நேற்று தெரிவித்துள்ளார்.


பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் 3ஆவது அத்தியாயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிகள் குறித்துப் பேசுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் இந்த அறிக்கையை அமைச்சரவை அனுமதி ஊடாக ஏற்றுக்கொள்ளுமானால் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி இடம்பெற்றுள்ளது என்பதனை ஏற்பதாகும்.

இந்த அறிக்கை பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய அமைச்சர் விஜயபால மெண்டிஸ் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி பட்டலந்தை அறிக்கையைச் சபையில் முன்வைத்தார்.


அவ்வாறு இல்லை எனப் பொய் கூறும் அரசாங்க தரப்பினர் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஹன்சாட்டின் ஆயிரத்து 581 ஆவது பக்கத்தைப் பார்ப்பார்களானால் அதற்கான சாட்சியினை பெறமுடியும்.


ஆகவே, பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யவோ அல்லது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது.

1948 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவுக்கே நீதிமன்ற அதிகாரம் காணப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவால் நபரொருவர் குற்றமிழைத்தாரா? இல்லையா? என்பதனை தீர்மானிக்க முடியும்.

அவ்வாறு எனில், திசைக்காட்டியின் பொய் பிரசாரத்தில் புதிதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையும் இணைந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »