களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின்
முன்னாள் மாவட்ட அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில், லக்ஷ்மன் விஜேமான்ன கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.