கொழும்பு துறைமுகத்தையும் கொலன்னாவவில்
உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனையத்தையும் இணைக்கும் எரிபொருள் குழாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்துள்ளது.எரிபொருள் வழங்கும் இரண்டு குழாய்களில் ஒன்றில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனைய குழாயைப் பயன்படுத்தி போதுமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.