2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி,
க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் அண்மைக் காலமாக பல தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால், க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்களினால் மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.