Our Feeds


Wednesday, March 26, 2025

SHAHNI RAMEES

#VIDEO: விபத்தில் சிக்கி உயிரிழந்த களனி பல்கலைக்கழக பேராசிரியர்! ; படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 


மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 48.5 ஆவது கிலோமீற்றர்

மைல்கல் அருகில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் இன்று புதன்கிழமை (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



களனி பல்கலைக்கழக தத்துவ ஆய்வுகள் துறையின் உளவியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய 46 வயதுடைய பேராசிரியர் ஒருவர் தனது மனைவி, 3 பிள்ளைகள் மற்றும்  மனைவியின் தாய் மற்றும் சகோதரனுடன் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்றுவிட்டு வேனில் மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துள்ளனர்.


இதன்போது இந்த வேனானது வீதியில் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


விபத்தின் போது, வேனின் பயணித்த களனி பல்கலைக்கழக பேராசிரியரும், அவரது மனைவியும், 3 பிள்ளைகளும் மனைவியின் தாய் மற்றும் சகோதரனும் படுகாயமடைந்த நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  களனி பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்தார்.


இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த களனி பல்கலைக்கழக பேராசிரியரின் மனைவியும் , 3 பிள்ளைகளும் , மனைவியின் தாய் மற்றும்சகோதரனும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.


பின்னர் களனி பல்கலைக்கழக பேராசிரியரின் 3 பிள்ளைகளும் மனைவியின் தாயும் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மனைவியின் சகோதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.


இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்யில் சிகிச்சை பெற்ற வந்த களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரின் மனைவியும் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »