Our Feeds


Thursday, March 27, 2025

SHAHNI RAMEES

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது இந்தியா!

 

உலகளாவிய ரீதியில் தேயிலை ஏற்றுமதியில் கென்யா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், இலங்கையை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதன்படி,  2024 ஆம் ஆண்டில் இந்தியா 254 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டில், இந்தியாவும் இலங்கையும் சுமார் 231 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதியுடன் நேருக்கு நேர் மோதின.

ஆனால் 2024 ஆம் ஆண்டில் இந்தியா 24 மில்லியன் கிலோ தேயிலையை அதிகளவு ஏற்றுமதி செய்து இலங்கையை முந்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியா 2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதியில் இரண்டாவது சிறந்த இலாபத்தை அடைந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு சுமார் 256 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்திருந்தது. 

2024 ஆம் ஆண்டின் தேயிலை ஏற்றுமதி வருமானம்  இந்திய மதிப்பில் 7,112 ரூபாாய் கோடியாகும். 

கடந்த பல ஆண்டுகளாக இந்தியா 200 தொடக்கம் 225 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்து வந்துள்ளது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டை தவிர்ந்து ஏற்பட்ட  அபரிமிதமான வளர்ச்சி தேயிலைத் தொழில்துறையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் கிலோ என்ற இலக்கை எட்டும் நம்பிக்கையை அளித்துள்ளது. 

இந்தியா சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1,400 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்கிறது.

ஏற்றுமதியில் பெரும்பகுதி மரபுவழிப் பிரிவிலிருந்து வருகிறது, இதன் வளர்ச்சிக்கு அண்மைய காலங்களில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆரம்பித்த பல்வேறு திட்டங்கள் துணைபுரிந்துள்ளன. "இந்திய மத்திய அரசின் சாதகமான ஏற்றுமதிக் கொள்கை மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், இந்தத் தொழில்துறை எதிர்வரும் ஆண்டுகளில் அதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் என நம்புகிறது" என்று இந்திய தேயிலை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபீர் குமார் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »