Our Feeds


Wednesday, March 12, 2025

Zameera

சுரக்ஷா வாரம்: அட்டைகள் விநியோகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு




 சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளில் படிக்கும் 4 முதல் 21 வயது வரையிலான 40 லட்சம் மாணவர்கள் வரை ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டத்தை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஜென்ரல் லிமிடெட் ஆகியவை இணைந்து செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

2024 ஜூலை முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உரிய நிறுவனங்கள்,ணங்கியுள்ளன.

இதற்காக அரசாங்கம் ரூ. 7112 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, அந்த குழந்தைகளுக்கு சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் பின்வரும் பலன்களை பெறலாம்.
சுகாதாரக் காப்பீடு உள்நோயாளிகளுக்கான பலன்கள் – ரூ. 300,000/= (அரச/ தனியார் மருத்துவமனைகள்) வெளிநோயாளிகளுக்கான பலன்கள் ரூ. 20,000/= தீவிர நோய்களுக்கான பலன்கள் ரூ. 1,500,000/=
விபத்துக் காப்பீடு
முழு நிரந்தர இயலாமைக்கு – ரூ. 200,000/=
நிரந்தர பகுதி இயலாமைக்கு – ரூ. 150,000/=
தற்காலிக இயலாமைக்கு ரூ. 25,000/= முதல் ரூ. 100,000/= வரை
ஆயுள் காப்பீடானது, ஆண்டு வருமானம் ரூ.180,000/=க்குக் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், “அஸ்வசும்” திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்/ சட்டப்பூர்வ பாதுகாவலர் இறந்தால், மாணவர்களுக்கு தலா ரூ 75,000/= வழங்கப்படும்.

ஒரு மரணத்திற்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகை ரூ. 225,000/= ஆகும், மேலும் அந்த தொகை குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாக ஒதுக்கப்படும். இரண்டு பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் இறப்புக்கு இந்த காப்பீடு தனித்தனியாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் பலன்களைப் பெற, உரிமைகோரல் படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பாடசாலை அதிபர் சான்றளித்து இலங்கை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஜெனரல் லிமிடெட்டின் https://www.srilankainsurance.lk/suraksha/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »