Our Feeds


Sunday, March 30, 2025

SHAHNI RAMEES

இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் - சரத் பொன்சேகா!

 

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜகத் ஜயசூரிய, வசந்த கரன்னாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள்.

போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன்.

அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திரசில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும்.

மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »