Our Feeds


Saturday, March 22, 2025

SHAHNI RAMEES

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் ருவைஸ் ஹனிஃபா!

 

கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா களமிறக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாநகரப் பகுதியில் வசிப்பவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றக்கூடிய தலைவராக வைத்தியர் ஹனிஃபா இத் தேர்தலில் களமிறக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணரான ஹனிஃபா, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார், ஆயிரக்கணக்கான நோயாளிகளின் பராமரிப்பிற்கு பங்களித்துள்ளார்.

இலவசக் கல்வியை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் தற்போது விரிவுரை செய்யும் ஒரு கல்வியாளரும் ஆவார். மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் குடும்ப சுகாதார பிரிவை நிறுவிய நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் காணப்படுகின்றார்.

மேம்பட்ட உட்கட்டமைப்பு, வீட்டுவசதி தீர்வுகள் மற்றும் புதிய வருமானம் ஈட்டும் வழிகளைக் கொண்ட ஒரு வளமான மற்றும் நவீன நகரத்தை உருவாக்குவதே கொழும்பிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்குப் பார்வை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். 

ஹனிஃபா ஊழல் இல்லாத புதிய முகத்தையும் புதிய தலைமையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தலைநகரில் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »