கத்தாரில் முன்னணி தமிழ் ஊடகமாக செயல்பட்டுவரும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு நடாத்திய இப்தார் நிகழ்வு ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஜே.எம்.பாஸித் அவர்களின் தலைமையில் மார்ச் 18 ஆம் திகதி அல் ஜசீரா அகாடமியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கத்தாரில் வாழும் இலங்கை மற்றும் இந்திய சமூகத்தினரை ஒன்றிணைக்கும் விதமாக அமைந்தது.
நிகழ்வின் பிரதம அதிதியாக, கத்தார் நாட்டிற்கான இலங்கை தூதுவர் திருமதி ரோஷன் சித்தாரா கான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர், சமூகத்தினரின் ஒற்றுமை மற்றும் சமுதாயத்தின் நலன் குறித்தும் வலியுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் கத்தாரில் வாழும் இலங்கை இந்திய சமூக தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கத்தார் வாழ் இலங்கை, இந்திய தமிழ் பேசும் சமூகத்தினரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.