Our Feeds


Monday, March 31, 2025

SHAHNI RAMEES

முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!



பேராதனை, ஏதடுவாவ பகுதியில் முச்சக்கர

வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 


நேற்று (30) இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர வண்டி விளையாட்டு மைதானமொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


விபத்தில் உயிரிழந்தவர்கள் போயகம மற்றும் ஹெந்தெனிய பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 53 வயதுடைய இருவர் ஆவர். 


சாரதியின் கட்டுப்பாட்டடை இழந்து முச்சக்கரவண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தின் போது நான்கு பேர் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த விபத்தில் பின் இருக்கையில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர். 


சடலங்கள் பேபேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »