Our Feeds


Monday, March 31, 2025

SHAHNI RAMEES

மக்களை வாழ வைப்பது எமது கடமையாகும்.

 

எமது நாட்டின் வங்குரோத்து நிலையால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மக்களுக்கு ஆற்ற வேண்டிய பெரும் பணி எம்மத்தியில் இருந்து வருகிறது. பசியாலும் வேதனையாலும் வாடும் மக்களின் வலியையும் கண்ணீரையும் புரிந்து கொண்டு அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டியது எமது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்து காணப்படும் IMF இணக்கப்பாட்டை மக்களுக்குச் சாதகமான ஒன்றாக மாற்ற வேண்டும். மக்களை வாழ வைப்பது எமது கடமையாகும். இதனை நிறைவேற்ற நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

சமாதான நீதவான், கொரிகஸ்வெவ சந்திரரதன நாயக்க தேரருக்கு மல்வத்து பீடத்தின் மகாசங்கத்தினரின் ஆசியுடன் இரண்டாம் சங்கநாயக பதவிப் பத்திரம் மற்றும் கௌரவப் பட்டம் வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நாட்டிற்கு மக்களினது பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளூம் தலைவர் ஒருவர் தேவை. துன்பப்படும் மக்களை விடுவிக்கும் பொறுப்பை எந்தவித பின்வாங்கலும் இன்றி நிறைவேற்ற வேண்டும். வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் பயணத்தில் பெரும் செல்வந்தர்கள் அதிக சுமைகளைச் சுமக்க வேண்டும். துன்புறும் மக்களுக்கான எமது பொறுப்பை சரியாக நிறைவேற்றி அனைவரும் வாழக்கூடிய தாய்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் பட்டமும் முதுகலைமானிப் பட்டமும் இத்தேரர், மினிபே பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள சிறிசங்கபோ பிரிவேனில் சேவையாற்றி ஏராளமான மக்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஞாயிறு தர்ம போதனை பாடசாலை முறையை மேம்படுத்தி கட்டியெழுப்புவதிலும் இவர் பெரும் பங்காற்றியுள்ளார். சமய பணியில் ஈடுபட்டுக் கொண்டு சமூக சேவையிலும் ஈடுபட்டு துன்புறும் மக்களுக்காக பெரும் சேவையை இவர் ஆற்றியுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »