உள்ளூராட்சித் தேர்தலுக்கான பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் சகல பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.