Our Feeds


Thursday, March 13, 2025

SHAHNI RAMEES

அசோக ரன்வல கலாநிதி பட்டத்தினை கொண்டுவந்து காட்டுவதாக கூறி 3 மாதங்கள் ஆகிவிட்டது!

 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின்

முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா செய்து மூன்று மாதங்களாகின்றன.


அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையே அவரது இராஜினாமாவுக்குக் காரணம்.


எதிர்வரும் காலங்களில் தனது பட்டதாரி சான்றிதழை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்து டிசம்பர் 13ஆம் திகதி பதவி விலகினார்.


ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை பட்டப்படிப்பு சான்றிதழ் முன்வைக்கப்படவில்லை.


ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகவும் ஆனால் இதுவரை சான்றிதழ் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »