Our Feeds


Tuesday, March 18, 2025

Zameera

2 மீனவர்களை காணவில்லை


 யாழ். ஊர்காவற்றுறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 15 ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து தோமஸ் டக்ளஸ் என்பவரின் படகில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால், அந்த இருவரில் எவரும் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »