திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் 29 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் முன்னெடுத்த சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.