ஐரோப்பாவிற்கு தப்பிச்செல்லும் நோக்கில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க – ஆடியம்பலம் பகுதியில் தங்கியிருந்த குறித்த பிரஜைகள் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
20 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட 10 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்கு வந்த சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி மாதம் நாட்டை வந்தடைந்துள்ளனர
கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடம் நாட்டில் தங்கியிருப்பதற்கான விசா காலம் நிறைவடைந்திருந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் நாடு கடத்தப்படும் வரை வெலிசறை தடுப்பு மத்திய நிலைத்தில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.