எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை (28) மாலை நடைபெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் ஆரம்பகட்ட திட்டங்கள் தொடர்பான கட்சித் தலைவர்களின் பார்வைகள் குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை இன்று (30) இரவு நடைபெற உள்ளது எனத்தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இரு கட்சிகளும் நேற்றைய கலந்துரையாடல்களின் முடிவுகள் குறித்து இன்று தங்கள் கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்க உள்ளன.