ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு கொழும்பில் உள்ள விருந்தகம் ஒன்றில் இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் மற்றொரு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thursday, January 23, 2025
UNP மற்றும் SJB பேச்சுவார்த்தை வெற்றி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »