Our Feeds

Saturday, January 18, 2025

SHAHNI RAMEES

மஹிந்த ராஜபக்ஷ செய்தால் பிழை - அநுரகுமார செய்தால் சரி - SLPP தாக்கு!

கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்துக்காக சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க நேரிடும் என்று கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று துறைமுக நகர திட்டத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விமர்சித்த அனைத்தையும் சரி என்று குறிப்பிடும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்தியா மற்றும் சீனா எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  அண்மையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்த இந்தியா மற்றும் சீனா அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்த போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் நிர்மாண பணிகளுக்கு சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க நேரிடும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அப்போது குற்றஞ்சாட்டினார். தற்போது கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்துவதாக சீனாவுக்கு உத்தரவாதமளித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் நாட்டுக்காக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்த போது மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத்தினர் திட்டத்தின் நன்மைகளை ஆராயாமல், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுவார்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டங்களுக்கு இறங்குவார்கள். இவ்வாறான செயற்பாடுகளினால் பல வெளிநாட்டு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்காமல் போயின. ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாகும்.

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது அம்பாந்தோட்டை பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 3.7 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடு ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார். இந்த முதலீடு கடந்த கால அரசாங்கத்தின் முயற்சியாக கருத வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அம்பாந்தோட்டை பகுதியில் புதிய முதலீட்டு வலயத்தை அறிமுகப்படுத்தி அதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 1100 ஏக்கர் காணியை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு  வழங்கினார். கடந்த அரசாங்கங்களின் சிறந்த திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமுல்படுத்துவது வரவேற்கத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »