Our Feeds


Wednesday, January 29, 2025

Sri Lanka

உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு சட்டத்துக்கு முரணானது - SLMC!



ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

தற்பொழுது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஷேட சட்ட மூலம் அடிப்படையில் ஊள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்படும் திகதி அறிவிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அவர்களுக்கு கீழ் இயங்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து மூன்று மாதத்துக்குள் உள்ள ஒரு திகதியாக வேண்டும்.

ஆகவே தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளரகளை அழைத்து கலைந்தாலோசித்த பிற்பாடு திகதி அறிவிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்துக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சாதகமாக திகதியை தீர்மானிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக நாங்கள் கருதுகிறோம்- என்று நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »