தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
“நிஹால் கலப்பட்டியுடன் தொடங்கிய பயணத்தை நாங்கள் அப்படியே தொடர்கிறோம்..” அவர் மேலும் கூறினார்.
பொரளை மக்கள் வங்கியின் தற்போதைய வங்கிக் கணக்கு தொடர்பான பணம் வரவு வைக்கப்படும் எனவும், அதன் பின்னர் அந்த பணம் பொது சேவைக்கு பயன்படுத்தப்படும் எனவும் இதன் மூலம் அதிகளவான மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்