Our Feeds


Thursday, January 9, 2025

Sri Lanka

NPPயின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வகுப்பு எடுக்க வேண்டும் - சிறிதரன்MP!


தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளருக்கு முதலில் வகுப்பு எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் அண்மையில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

புத்தளம்,சிலாபம்,நீர்கொழும்பு,கொழும்பு,கொள்ளுப்பிட்டி,வெள்ளவத்தை, வத்தளை போன்ற இடங்களில் தமிழர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் கூறியுள்ளதாக சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்

கடந்தகால வரலாறு சரிவரத் தெரியாமல் அந்த நபர் அவ்வாறு கூறியுள்ளதாகவும் எனவே தேசிய மக்கள் சக்தி முதலில் தமது ஊடக இணைப்பாளருக்கு வரலாற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் குறிப்பிட்ட விடயம் மிகவும் ஆபத்தானதொன்று எனவும் சுட்டிக்காட்டினார்.

1970 இல் இருந்து 1985 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அனுராதபுரத்தில் இருந்து 22,000 தமிழ் மக்கள் இரவோடு இரவாக கலைக்கப்பட்டதாகவும் சிறிதரன் சபையில் நினைவுபடுத்தியிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »