Our Feeds


Saturday, January 18, 2025

SHAHNI RAMEES

மியன்மார் அகதிகளுக்காக போராட்டத்தில் இறங்கிய மட்டக்களப்பு மாவட்ட MP எம்.எஸ்.நளீம்!

 


மியன்மார் அகதிகளுக்காக போராட்டத்தில்

இறங்கிய மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம்

ஏறாவூர் முஹம்மது அஸ்மி! 

மியான்மார் ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரீசீலனை செய்யக்கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் ஹாஜியார் தலைமையில் மட்டக்களப்பு  ஜாமிஉஸ்ஸ்லாம் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (17) பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு விவசாய சம்மேளனத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் அவர்களது தலைமையில் ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் அரசின் தீர்மானத்தை எதிர்த்து பள்ளிவாசலுக்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, மட்டக்களப்பு விவசாய சம்மேளனத் தலைவர் சுந்தரேசன் உட்பட பொதுமக்கள் பலரும் இக்கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

ரோஹிங்கிய அகதிகளை துன்புறுத்தும் மியான்மாருக்கு திருப்பி அனுப்பாதே, இலங்கை அரசே சர்வதேச சட்டங்களை அமுல்படுத்து, UNHCR அப்பாவி மியான்மார் அகதிகளைப் பொறுப்பெடுத்து புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு பராப்படுத்து, மியான்மாஇருந்து மேலும் ஒரு இலட்சம் அகதிகள் படையெடுப்பார்கள் என்ற பீதியைக்கிளப்பாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்து அவர்களை UNHCR இடம் ஒப்படைத்து பொருத்தமான பகுதிக்கு அவர்களைப் பொறுப்பேற்கத் தயாராகவுள்ள நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கையெடுக்க முன்வர வேண்டும்.

அத்துடன், 70 வீதமான சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்கினைப்பெற்ற அரசு அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும், அகதிகளாக வந்த அவர்கள் இலங்கைக்குள் படையெடுத்து வரவில்லை. தங்களின் உயிரைக்காப்பாற்ற கடலுக்குள் இறைவனை நம்பி தங்கள் குடும்பத்துடன் கால் வைத்தவர்கள். கடலில் தத்தளித்த அவர்களை இலங்கை படையினர் தான் மீட்டு வந்தனர்.

ஆகவே, அவர்களை அகதிகள் என்ற அடிப்படையில் கையாள வேண்டுமென வேண்டுகோளை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம் இங்கு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »