Our Feeds


Thursday, January 16, 2025

SHAHNI RAMEES

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு! - ரோஹிணி கவிரத்ன MP

 


தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை

அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின் இத்தகைய அறிவிப்பானது அடிப்படையற்றதும் இயலாமையை மறைக்கும் செயல் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார். 


இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், 


46 இலட்சம் மெட்ரிக் டொன் நெல் கடந்த சில வருடங்களாகவே அறுவடையாகக் கிடைக்கப்பெற்றது. இதிலிருந்து 29 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. 


எமது நாட்டின் அரிசி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு பச்சை அரிசியாகும். தென் மாகாண நெல் உற்பத்தியில் 85 வீதம் பச்சை அரிசியாகும். இதனடிப்படையில் சுமார் 7 இலட்சம் டொன் பச்சை அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.


இரண்டு சந்தர்ப்பங்களில் 20 கிலோ அரிசி நாட்டில் 27 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதாவது 54,000 மெட்ரிக் டொன் அரிசி இதன் போது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 


மேலும் இவ்வாறு வழங்கப்பட்டது போக 75 வீதமான வெள்ளை பச்சை அரிசி எஞ்சியிருந்தது. எனவே மக்களுக்கு இலவசமாகக் கடந்த அரசாங்கம் அரிசி வழங்கியதாகக் கூறினாலும், அது தேசிய அரிசி உற்பத்தியில் வெறும் 14 வீதமாகும்.  


எமது நாட்டில் அரிசி பயன்பாட்டில் 22 வீதம் சிவப்பு பச்சை அரிசியும், 18 வீதம் வெள்ளை பச்சை அரிசியாகவும் காணப்படுகிறது. 


10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தியிலிருந்து 54 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை ஏழை மக்களுக்கு வழங்கியதற்காக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு உணவளிக்கும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசாங்கம் போலி பிரசாரங்களைச் செய்கிறது என குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »